வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 04, 2025

மூன்று தலைமுறைகளுக்கு சான்றளித்த முத்து நபி (ஸல்

  لَّقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18

 இன்று நம்முடைய தலைவர் முஹம்மது நபி (ஸ்ல) அவர்களின் பிறந்த நாள்.

فمحمدُنا هوَ سيدُنا *** فالعِزُّ لَنا لإِجَابتِهِ

பெருமானாருக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.

அவற்றில்  ஒன்று

நபி (ஸல்) அவர்கள் தான் வாழ்ந்த சமூகத்தையும்  அதற்கடுத்த தலைமுறையையும் அதற்கும் அடுத்த தலைமுறை  என மூன்று தலைமுறைகளுக்கு சிறப்பு என்று சான்றளித்தவர் ஆவார்கள்

 

 عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ )

சஹாபாக்கள், தாபிஃகள் தபவுத் தாபிஃ என்ற வரிசை முஹம்மது நபி அவர்களுக்கு இருப்பது போல இந்த உலகில் வேறெவருக்கும் கிடையாது.

இவ்வாறு மூன்று தலைமுறை தனித்து பார்க்கப்படுகிறது என்பது மட்டுமல்ல; அந்த தலைமுறைகள் மனித வரலாற்றின் மிகச் சிறப்பான தலைமுறைகளாக அவை இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இது சாதாரணமானது அல்ல; அசாதாராணமானது.

--

பொதுவாக இன்றை மக்களிடம் இனி வரும் நாட்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை கூட பெரிதாக இருப்பதில்லை. இன்றுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்கிறது.

ஆனால் நாம் இனி வரும் நாட்களில் எப்படி இருக்க வேண்டும் நமது அடுத்த தலைமுறை பண்பாட்டு அளவில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்,

குர் ஆன் கற்பிக்கிறது.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ (128)

நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சிந்திப்பவர்களாக இருந்தார்கள் என்பதை தாயிப் நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.

و جبريل قائم عنده، يخبره بأن الله بعث ملك الجبال برسالة يقول فيها: إن شئت يا محمد أن أطبق عليهم الأخشبين، فأتى الجواب منه عليه السلام بالعفو عنهم قائلاً: ( أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئارواه البخاري .

பெருமானாரின் உன்னதமான தலை பண்புக்கு எடுத்துக் காட்டு இது.

இந்த சிந்தனையில் அவர்கள் உழைத்த காரணத்தால் தன் வாழ்வின் நிறைவில் தான் வாழ்ந்த சமுதாயத்தை பாராட்டி இப்படி கூறினார்கள்

قالَ لَنَا رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ الحُدَيْبِيَةِ: أنتُمْ خَيْرُ أهْلِ الأرْضِ

الراويجابر بن عبدالله | المحدثالبخاري

இன்றைய தலைவர்கள் யாருக்காவது தன் தொண்டர்களை பற்றி இப்படி உத்தரவாதம் கொடுக்கிற தைரியம் இருக்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நம் தம்ழ் நாட்டில் ஒரு தலைவர் மதுவுக்கு எதிராக மாநாடு நடத்தினார். பாராட்டிற்குரியது.

ஆனால் அங்கும் அவரது தொண்டர்கள் பாட்டில்களுடன் வந்தார்கள் என்று செய்திகள் தெரிவித்தன.

இதுதான் மற்ற தலைவர்களில் காணக்கிடைக்கிற நிலை.

நம்முடைய தலைவர் தான் வாழ்ந்த தலைமுறைக்கு மட்டுமல்ல

தனக்கடுத்த மூன்று தலைமுறைக்கு உத்தரவாதம் வழஙழகினார்கள்,

அந்த தலைமுறயின் உன்னதம்

ஒரு பெண் குளிப்பதை பார்த்து விட்ட்தை ஒரு பெரும் குற்றமாக கருதி ஒரு சஹாபி பெருமானாரின் முன்னிலையில் உயிரை விட்டார்.

அவரது ஜனாஸாவில் கால் வைக்க முடியாத அளவு மலக்குகள் கலந்து கொண்டனர்.  

عن جابر بن عبد الله رضي الله عنهما قال :

إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .

رواه أبو نعيم في "حلية الأولياء

சமய ஈடுபாடு - அரசியல் – கலாச்சாரம் என ஒவ்வொரு துறையிலும் மின்னும் நட்சத்திரங்கள் இந்த தலைமுறைகளில் வாழ்ந்தவர்கள் தாம்.

அவர்களுக்கு நிகரான நட்சத்திரங்களை இந்த உலக வரலாற்றில் பார்ப்பது அரிது.  

எப்படி உருவாக்கினார்கள்

ரெஸ்பான்ஸிபல் பர்சன்ஸ்

பொறுப்புணர்வுள்ளவர்களாக அவர்களில் ஒவ்வொருவரையும் ஆக்கினார்கள்.

عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ) متفق عليه.

நான் இல்லை எனில் அபூபக்கரிடம் செல் ! என்றபெருமானார்.

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَتَتْ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ قَالَتْ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ كَأَنَّهَا تَقُولُ الْمَوْتَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ3659(புகாரி

அபூபக்கர் ரலி அவர்களிடம் அந்த பொறுப்புணர்வு மிக துல்லியமாக  இருந்த்து.

பெருமானாரின் வாபாத்தை தொடர்ந்து உஸாமா ரலி அவர்களின் படையை உடனடியாக அனுப்புவதில் தீர்மானமாக இருந்தார்கள்.

பெரிய் சஹாபாக்களை கொண்ட அந்த படையை இந்த நேரத்தில் மதீனாவை விட்டு வெளியே அனுப்புவது பொருத்தமாக இருக்காது என்று தோழர்கள் ஆலோசனை கூறினார்கள்.

ஆனால் அபூபக்கர் ரலி அதை மறுத்துவிட்டார். படைத்தளபதியிடம்  உமர் ரலி அவர்களை மட்டும் தன்னோடு இருக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

காட்டு விலங்குகள் என்னை கடித்து எடுத்து சென்று விடும் என்று இருந்தாலும் நான் உசாமாவின் படையை அனுப்பியே தீருவேன் என்றார்கள்.

சமரசங்கள் அற்ற பொறுப்புணர்வுக்கு அது சாட்சி.

واقترح بعض الصحابة على أبي بكر بأن يبقي الجيش فقالوا: «إن هؤلاء جلُّ المسلمين، والعربُ على ما ترى قد انتقضت بك، فليس ينبغي لك أن تفرق عنك جماعة المسلمين،

 فقال أبو بكر: «والذي نفس أبي بكر بيده، لو ظننت أن السباع تخطفني لأنفذت بعث أسامة كما أمر به رسول الله ، ولو لم يبق في القرى غيري لأنفذته

இது நமக்கு தருகிற பாடம். நாம் பிள்ளைகளின் பண்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று தொழுகைக்கு வா என்று மகனை அழைக்க கூட சங்கடப்படுகிறோம். அவன் வழிக்கு விட்டு விடுகிறோம்.

ஒரு தந்தை ரமலான் மாதத்தில் பெரியவனாகிவிட்ட தன்னுடை பையனிடம் ஜகாத் தொகை அடங்கிய பையை கொடுத்து ஆட்களை குறிப்பிட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு வருமாறு கூறினார்.அவர்களும் பழக வேண்டும் அல்லவா என்று அவர் கூறினார்.

இது போன்ற நடவடிக்கைகளை நாம் தொடர வேண்டும்.

சுயமரியாதை

பெருமானார் சுய மரியாதை மிக்கவர்கள் தனது தலைமுறையை உருவாக்கினார்கள்

 யாரிடமும் கேட்காதே! என்ற பெருமானாரின் வார்த்தைக்குசவ்பான் (ரலி) கட்டுப்பட்ட விதம்

حديثُ ثوبان رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسم قال : ( مَنْ يَتَقَبَّلُ  لِي بِوَاحِدَةٍ وَأَتَقَبَّلُ لَهُ بِالْجَنَّةِ ؟ " قَالَ : قُلْتُ : أَنَا. قَالَ : ( لَا تَسْأَلِ النَّاسَ شَيْئًا ) فَكَانَ ثَوْبَانُ يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ ، فَلَا يَقُولُ لِأَحَدٍ نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَتَنَاوَلَهُ . رواه أبو داود (1450)

ஒழுக்கம்

பெருமானார் காலத்து சமூகம் ஒழுக்கம் குறித்து அதிகம் கவலைப்படாத சமுதாயமாக இருந்தது.

அந்த சமூகத்தை திருத்தி உன்னதமாக உயர்த்தினார்கள்.   

ஒழுக்கம் என்பதில் மிக சுருக்கமான ஒரு விளக்கம்.

மதிக்க வேண்டுயதை மதித்தல்

பெரியவர்களை மதித்தல் –

وَقَضَىٰ رَ‌بُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ‌ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْ‌هُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِ‌يمًا . وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّ‌حْمَةِ وَقُل رَّ‌بِّ ارْ‌حَمْهُمَا كَمَا رَ‌بَّيَانِي صَغِيرً‌ا} [الإسراء:23-

பெற்றோருக்கு பணிவிடை செய்தல் ஹஜ் உம்ராவின் நன்மை கிடைக்கும்

فقد أتى رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال إني اشتهي الجِهاد وإني لا أقدر عليه، فقال: «هل بقي أحد من والديك؟»، قال: أمي، قال: «فاتقِ الله فيها فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد فإذا دعتك أمك فاتق الله وبرها».

 தந்தையின் துஆ மறுக்கப்படாது.

 قال النبي صلى الله عليه وسلم : ( ثَلاثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لا شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ الْمَظْلُومِ ، وَدَعْوَةُ الْمُسَافِرِ ، وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ) رواه ابن ماجه 

 

உஸ்மான் ரலி அவர்கள் மதிப்புமிகு ஒரு பேரீத்தம் பழ தோட்டத்தை உருவாக்குவதற்காக சிறப்பான சில பேரீத்தம் பழங்களை  விதைக்காக ஆயிரம் திர்ஹம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்திருந்தார்கள்.

 அவர்களுடைய தாயார் இதை விதைக்காக வாங்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் சாப்பிட்டு விட்டார்,

 தோழர்கள் கவலைப்பட்டார்கள்.இப்படி விலை மதிப்புள்ளாதை தாயார்  சாப்பிட்டு விட்டார்களே என்றார்க்ள் .

உஸ்மான் ரலி சொன்னார்., இந்த விதையை விதைத்து தோட்டம் உருவாகி யிருந்தால் என்ன மகிழ்ச்சி அடைவேனே அதை விட பன் மடங்கு மகிழ்ச்சி என் அம்மா சாப்பிட்ட்தால் கிடைத்தது என்றார்கள்.

இன்றைய தலைமுறையிடம் இத்தகை பண்புகள் எவ்வளவு தூரம் சீரழிந்து கிடக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு பெண் மருத்தவர் சமீபத்தில் இஸ்லாமை தழுவினார். அவருடைய மருத்துவ மனைக்கு முதியவர்கள் ஹோம் களிலிருந்து அழைத்து வரப்படுவார்கள். உடன் யாரும் இருக்க மாட்டார்க:.

ஒரு முதிய பெண் அழைத்து வரப்பட்டாள். அவரை இரண்டு இளைஞர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்க.

டாக்டர் ஆச்சரியப்பட்டு அவரக்ளிடம் விசாரித்தார்.

அவர்கள் சொன்னார்கள். நாங்கள் முஸ்லிம்கள். எங்களது நபி எங்களுக்கு இப்படி உத்தரவிட்டுள்ளார் என்றார்கள்

40 வயதை கடந்த அந்த மருத்துவர் தனது வாழ்க்கைய எண்ணிப் பார்த்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்று கூறுகிறது. அல் ஜஸீரா.

சொந்த பெற்றோரை மதிக்காத தலைமுறை வேறு யாரையும் மதிக்கிறது என்பது ஏமாற்றும் செயலாகும்.

பெற்றோரையும் மற்றோரையும் மதிக்க வேண்டும்.

நன்மையை நாடுதல்

பெருமானார் தேர்ந்தெடுத்த மூன்றாவது இயல்பு இது,

فأرسل جرير رضي الله عنه غلامه ليشتري له فرساً، فوجد الغلام الفرس بثلاثمائة درهم، وجاء الغلام بصاحب الفرس ومعه الفرس إلى جرير ليقبضه الثمن، فلما رأى جرير الفرس وجده يستحق أكثر من ثلاثمائة، فقال: يا فلان! فرسك يستحق أربعمائة. قال: قبلت. قال: خمسمائة. قال: قبلت. قال: ستمائة. قال: قبلت.. حتى وصل به إلى ثمانمائة فقال الرجل: قبلت. فأعطاه الثمانمائة فتعجب الغلام،

وقال لـجرير : ما هذا الذي فعلت؟

قال له: إني بايعت رسول الله صلى الله عليه وسلم على النصح لكل مسلم. أي: لا أستطيع الغش، وهذه هي كمال المتابعة

யமன் நாட்டில் இஸ்லாம் எப்படி அறிமுகமாகி பரவியது என்பதை வரலாறு இப்படி கூறுகிறது.

முஸ்லிம் அரபு வியாபாரிகள் சந்தை அமைத்திருப்பார்கள். ஒருவருக்கு ஒரு வியாபாரம் நடந்து விட்டால் அடுத்த வியாபாரத்திற்கு கஸ்டமர்கள் வந்தால் அவரை மற்ற வியாபாரியிடம் அனுப்பி அவரிடம் இது கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள்

இந்த பண்பு எமன் மக்களை ஈர்த்தது என்கிறது வரலாறூ.

இன வாதம் சிந்தனை தவிர்ப்பு

பொதுவாக வரலாற்றில் எந்த கால கட்டத்திலும் மக்கள் தங்களது நிறம் அல்லது இனம் அல்லது தேசியம் அல்லது குழு மனப்பான்மையின் அடிப்படையில் தங்களை உயர்த்திக் கொள்ள முய்றசி செய்வார்கள்.

மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய செய்தி இது.

முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் தமது சமூகத்தை பண்பு செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாத்திரமே மனிதர்கள் சிறப்படைய முடியும் என்று தகவமைத்தார்கள்.

مَن أبطَأ به عمَلُه لَمْ يُسرِعْ به نسَبُه

الراويأبو هريرة | المحدثابن حبان 

யாரை அவருடை செயல் பின்னுக்கு கொண்டு சென்று விடுகிறதோ அவரை அவரது குடும்பம் முன்னே கொண்டு வந்து விட முடியாது.

 

பெருமானாரின் மிக உன்னதமான அறிவுரை இது

 இன்றும் சமூகத்தில் ஒரு மொழி பேசுவதால், அல்லது ஒரு இயக்கத்தில் அல்லது கட்சியில் இருப்பதால தன்னை உயர்ந்தவர்களாக கருத்திக் கொள்கிற எவரும் நபியின் வழிகாட்டுதலிருந்து விலகி விட்டவர் ஆவார்.

இறையச்சம்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு அதிகாரத்தை விட பண பலத்தை விட மற்ற செல்வாக்குகளை விட ஏன் பிரபலம் அடைவதை இறை நம்பிக்கையை தான் பிரதானமாக கற்பித்தார்கள். அந்த தலைமுறையும் அப்படி உருவானது.

عن أبي هريرة رضي الله عنه عن النبي - صلى الله عليه وسلم - فيما يرويه عن ربه جل وعلا أنه قال : ( وعزتي لا أجمع على عبدي خوفين ولا أجمع له أمنين ، إذا أمنني في الدنيا أخفته يوم القيامة ، وإذا خافني في الدنيا أمنته يوالقيامة )

عمر بن الخطاب قرأ سورة الطور إلى أن بلغ : إن عذاب ربك لواقع )سورة الطور : 77 ] فبكى واشتد بكاؤه حتى مرض وعادوه

இன்று எப்படியாவது பிரபலமடைந்து விட்டால் போதும் என்ற சிந்தனை மக்களிடம் இருக்கிறது.

இறையச்சம் இல்லாத எதுவும் நிலைக்காது என்பதை பெருமானார் சமூகத்திற்கு புரிய வைத்தார்கள்

இத்தகை அருமையான அடிப்படை பண்புகளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை மிக சிறப்பாக கட்டமைத்து விட்டு தான் நபியவர்கள்

இந்த பூமியின் மேல் வாழும் சிறந்த மனிதர்கள் நீங்கள் என்று பாராட்டினார்கள்.

அந்த தலைமுறையை மட்டுமல்ல அதற்கடுத்த இரண்டு தலைமுறையையும் சேர்த்தே பாராட்டினார்கள்.

வரலாறும் அது உண்மை என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

நாம் நமது தலைமூறைகள் குறித்து சிந்திப்போம்.

அல்லாஹ் திருப்தியடைந்த தலைமுறை என்ற சொல் எவ்வளவு உன்னதமானது என்று சிந்திப்போம்.

மக்கள் வியக்கிற அல்லது மக்கள் பாராட்டுகிற என்பதை தாண்டி இந்த சிந்தனை எவ்வளவு சிறப்பானது ?

சிந்தித்தாலே கூட அல்லாஹ் உதவுவான். செயல்படத் தொடங்கினால் நிச்சயம் மாற்றத்தை தருவான்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

Thursday, August 28, 2025

கோமான் நபியின் குழந்தைகள்

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகில் தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.

பரிபூரண வாழ்வு

பெருமானாருக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. அதில் ஒன்று அவர்களுடைய வாரிசுகள் எனும் குழந்தைகள் ஆவார்.

நபிகள் நாயகம (ஸல்) அவரக்ளுக்கு 7 பிள்ளைகளும் 8 பேரக் குழந்தைகளும் இருந்தார்கள்.  7 குழந்தைகளில் பாத்திமா (ரலி அவர்களை தவிர மற்ற அனைவரும் பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்கிற காலத்திலேயே வபாத்தாகி விட்டார்கள்.

ஆனால் அவர்களில் ஒவ்வொருவரும் பெருமானாரின் பெருமையை நிலை நிறுத்துவபவர்களாக இருந்தார்கள்.

பெருமானாரின் இப்பிள்ளைகள் பெருமானாரின் வாழ்வை பரிபூரண்ப் படுத்தினார்கள்.

சந்ததிகள் இல்லாவிட்டாலும் சிறப்பாக வாழ்ந்தவர்கள் உண்டு. ஜனாதிபதி அப்துல் கலாமை போல. ஐசக் நியூட்டன மதர் தெரஸா இமாம் நவவி ரஹ் ஆகியோரைப் போல

ஆனால்  ஒரு மனிதருக்கு சந்ததிகள் இருந்தால் தான் அவர் முழுமையான மனித வாழ்வை அடைந்தவர் ஆகிறார்.

இது இஸ்லாமின் கருத்து.

எனவே தான் இயல்பாக குழந்தை கிடைக்காத நபிமார்கள் தமது முதுமையில் இறைவனிடம் வரமாக கேட்டு குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இபுறாஹீம் நபிக்கு குழந்தை பேறு வழங்கியதை தான் செய்த ஒரு அருள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا ۖ وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ (27

 

எனவே குழந்தைகள் என்பவர்கள் ஒரு வாழ்வை நிறைவு படுத்தும் செல்வங்களே ஆவார்.

பெருமைக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் போதுமான குழந்தைகளை ஆண் பெண் வாரிசுகளாக கொடுத்தான். அதில் எந்த குறையையும் அல்லாஹ் வைக்க வில்லை.

தொடரும் பெருமை

இதில் உலக வரலாற்றின் ஒரு பேர் ஆச்சரியரம் என்னவெனில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசுகளின் தொடர் 1500 ஆண்டுகளை கடந்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமான உறுதியான வமிசத் தொடர்களை கொண்ட நபியின் குடும்பத்தார் இன்றும் உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதை திருக்குர்ஆண்  உறஊதிப்படுத்துகிறது. 

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)

பெருமானார் (ஸல்) அவர்களது பிள்ளைகளில் அவரது புகழை நிலை நாட்டும் சிறப்பம்சங்கள் ஏராளம் உண்டு.

அவற்றில் சில

  • 1.   அந்த பிள்ளைகள் பெருமானாரை ஈமான் கொண்டார்கள்

பெருமானாரின் மூத்த மகள் ஜைனப் ரலி அவர்களுக்கு திருமணம் நடை பெற்ற பிறகே பெருமானார் நபி என தன்னை அறிவித்தார்கள். உடனேயே பெருமானாரை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது கணவர் அப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

  • 2.   தீனுக்காக அர்ப்பணம் செய்தார்கள். 

பெருமானாரின் இளைய மகள் ருகையா ரலி உஸ்மான் ரலி அவர்களை திருமணம் செய்த கையோடு அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்./

  • 3.   தலைவரின் பிள்ளை என்பதற்காக எந்த உலகாயத சலுகைகளையும் அவர்க் எதிர்பார்க்க வில்லை.

தங்களுக்கு ஒரு உதவி ஆள் தேவை என பாத்திமா ரலி அவர்களும் அலி ரலி அவர்களும் கேட்ட போது

தன் நெஞ்சுக்கு நெருக்கமான பாத்திமா ரலி அவர்களிடம் திண்ணை த் தோழர்கள் பசியாக இருக்க உன்னை நான் தேர்ந்தெடுக்க முடியாது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் மறுத்தார்கள். அதை திருப்தியோடு பாத்திமா ரலி அவர்களும் அலி ரலி அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

- فاطمة بَضْعَة مِنِّي، فَمَنْ أَغْضبها أَغْضَبَنِي) رواه البخاري.

فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: واللهِ لا أُعْطيكما وأَدَعُ أهلَ الصُّفَّةِ تَطْوى بُطونُهم، لا أَجِدُ ما أُنفِقُ عليهم، ولكنِّي أَبيعُهم وأُنفِقُ عليهم أَثْمانَهم، رواه أحمد

  • 4.   பெருமானாரின் பிள்ளைகளில் இருந்த நான்காவது பெரிய சிறப்பு அவர்களில் எவரும் பெருமானாரின் மரியாதைக்கு குறைவை ஏற்படுத்துபவர்களாக இருக்கவில்லை.

(நமது பிள்ளைகள் நமது பெருமையை சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். என்று நாம் ஆசைப்பட வேண்டும். அதற்கு பெருமானார் ஒரு உதாரணம். )  

உலகின் பெரும் தலைவர்களில் பலருக்கும் ஏற்பட்டுள்ள ஒரு துயரம்.

பிள்ளைகள் பெற்றோருக்கு தொல்லையாக – அவர்களின் பெருமையை சிதைப்பவர்களாக அமைந்து விடுவதுண்டு.

நூஹ் நபியின் பிள்ளை அவரை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர் கெஞ்சி அழைத்தும் கப்பலில் ஏறவில்லை. அவரிடமே பெருமை பேசினான்.

وَنَادَىٰ نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ الْكَافِرِينَ (42قَالَ سَآوِي إِلَىٰ جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ

கோடிக்கணக்கான இந்திய மக்களின் மதிப்பிற்குரிய காந்தியடிகளின் மகன் ஹரிலால் இலண்டனுக்கு சென்று கிருத்துவராக மதம் மாறினார்.  அங்கு பெரும் குடிகாரர் என்று பெயரெடுத்தார்.

இது போல இன்னும் பல வரலாறுகள் உண்டு பெருமைக்குரிய பெற்றோருக்கு இழிவையும் கவலையை கொடுத்தவர்கள்

(அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும்.)

பெருமானாரின் பிள்ளைகளை வரலாறு எப்படி குறிப்பிடுகிறது தெரியுமா ?

 ولد الهدى  என்று பாராட்டுகிறது.

இன்று நாம் பெருமானாரின் பிள்ளைகள பற்றி பார்க்கிறோம். அந்த இதில் அவர்களது வரலாற்றை மட்டும் நாம் படிக்க மாட்டோம். உத்தம் தலைவரின் உன்னதமான பிள்ளைகள் அவர்கள் என்பதற்கான சான்றையும் அறிந்து கொள்வோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது 25 வயதில் 40 வயது கதீஜா ரலி அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கதீஜா ரலி பெருமானாருக்கு ஆறு குழந்தைகளை பெற்றுக் கொடுத்தார்கள்.

1.   காஸிம் ரலி

பெருமானாரி 27 வயதில் பிறந்தார்.

நீண்ட காலம் வாழ வில்லை . இரண்டு வயதிலேயே இறப்பெய்தினார். அவருக்கு சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு என்ற பெருமானார் சொர்க்கத்தில் அவரது சப்தத்தை கேட்கிறீரா என்று கதீஜா அம்மாவிடம் கூறினார்கள்.

 وذكر ابن الأثير  أنه عاش سنتين،

ولم يُكمل رضاعته

دخل على خديجة بنت خويلد بعد موت القاسم وهي تبكي فقالت: «يا رَسُول اللهِ دَرّتْ لُبَيْنَةُ القَاسم فلو كَان عَاش حتى يَستكمل رَضَاعَه لَهوّن عَليّ»، فقال لها: «إنّ لَه مُرضِعًا في الجنّة تستكملُ رَضَاعَتهُ»، قَالَ «إن شِئْت أَسَمِعْتك صوته في الجنّة»، فقالت: «بل أُصدّق اللهَ ورسوله

2.    زينب بنت محمد-

பெருமானாரின் 30  வயதில் பிறந்தார்.

துணிவும் அறிவாற்றலும் மிக்கவராக இருந்தார்.

10 வயதில் அவருக்கு பெருமானார் திருமணம் செயது வைத்தார்கள். அவருட்டய கணவர் أبو العاص بن الربيع ரலி

கதீஜா அம்மாவின் சகோதரி மகன்.

أسلمت زينب وبقي زوجها على دينه، وجعلت قريش تدعو أبا العاص لمفارقة زوجته زينب، فكان يردّ عليهم بقوله «لا والله، إنِّي لا أفارق صاحبتي، وما أحبُّ أنَّ لي بامرأتي امرأة من قريش

இரண்டு குழந்தைகள் பெற்றார். அதில் ஒருவர் இறந்து விட்டார்.

وأنجبت له ولدًا اسمه علي وبنتًا اسمها أمامة.

அவரது கணவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனாலும் கணவருடன் ஜைனப் ரலி வாழ்ந்து வந்தார்கள்.

பத்று யுத்ததில் அவர் கைதியாக முஸ்லிம்களிடம் சிக்கினார். ஜைனப் ரலி அவரை கதீஜா அம்மாவின் நக்க்களை கொடுத்தனுப்பி விடுவிக்க கேட்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் கதீஜா அம்மாவின் நகைகளை திருப்பி கொடுத்து அவரை விடுதல்ல செய்தார்கள். ஜைனப் ரலி  அவர்களை மதீனாவிற்கு அனுப்பி விட வேண்டும் என்று நிபந்தன்ன இட்டார்கள். அதை அவர் ஏற்றுக் கொண்டார். ஜைனப் அம்மாவை திருப்பி அனுப்பினார்.

மக்காவின் எதிரிகள் வற்புறுத்தி போதும் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள வில்லை .

ஆறு வருடங்கள் காத்திருந்தார் ஜைனப் ரலி அவர்கள். துணிச்சலும் சாமார்த்தியமும் மிக்க அவருடைய நடவடிக்கள் பாராட்டிற்குரியவை .

ஹிஜ்ரீ 8 ல் அபுல் ஆஸ் ரலி இஸ்லாமை ஏற்றார். அதன்பிறகு இருவரும் இணைந்தார்கள்.\

அபுல் ஆஸ் மாமனார் மெச்சிய மருமகனக இருந்தார்.மகள் விவகாரத்தில் மாமானாருக்கு எந்த தொல்லையும் கொடுத்ததில்லை. பல காலம் அவர் இஸ்லாமிற்கு வராத போதும்

ஜைனப் ரலி 30 வயதில் வபாத்தானார்.  

- قال عنه  النبي:    "حدّثني فصدقني، ووعدني فوفّى لي".

 - توفي زينب بعد إسلامه بمدة قصيرة، فتأثر جدًا بوفاتها.

- توفي بعد ذلك بفترة، وكان مسلمًا.

ونزل   النبي  في قبرها ومعه أبو العاص بن الربيع،

3.   ருகய்யா ரலி

பெருமானாரின்  33 வயதில் பிறந்தார்.

10 வயதுக்கு முன் சிறுமியாக இருந்த போது அவர்ர அபூலஹ்ப் உடைய மகனுக்கு பெருமானார் திருமணம் பேசி இருந்தார்கள். சுரத்து மஸ்த் இறங்கிய போது அவர் தலாக் விடப் பட்டார். அவரை பெருமானார் உஸ்மான் ரலி அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்/

தொடர்ந்து அபீசீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

இளம் தம்பதிகளை அனுப்பி வைத்து விட்டு பெருமானர் (ஸல்) அவர்கள் அபீசீனிய பகுதிகளிலிருந்து வருவோரிடம் அவர்களது அடையாளங்களை சொல்லி இப்படி ஒரு ஜோடியை பார்த்தீர்களா என்று விசாரிப்பார்கள்.

  تزوّجها ابن عم أبيها عتبة بن أبي لهب  

 ثمّ تزوّجها الخليفة الثالث لاحقا عثمان بن عفان في مكة،

ருகையா ரலி அபீசீனியாவில் ஒரு குழந்தையை பெற்றார்.

 

فولدت له هناك ولدًا سمّاه عبد الله 

21 வயதில் நோய்வாய்ப் பட்டிருந்த அவர் வபாத்தானார்.

 4.    أمّ كُلثُوم

பெருமானாரின் 34 வய்தில் பிறந்தார்.

அவரையும் அபூலஹ்பின் மகனுக்கு பெருமானார் சம்மதம் பேசி இருந்தார்கள். அவரும் தலாக் விட்டார்.

ருகையா ரலி இறந்த பிறகு அவரை உஸ்மாம் ரலி அவர்களுக்கே பெருமானார் திருமணம் செய்து கொடுத்தார்கள்

 

وقال النبي محمد أيضًا: «ما زوّجت عثمان أم كلثوم إلّا بوحي من السّماء

இவர் 7 வருடம் கணவருடன் வாழ்ந்தார் . குழந்தை எதுவும் பெற வில்லை.

ஹிஜ்ரீ 9 ல் மரணம் தனது 28 வயதில் வபாத்தானார்.  

وصلّى عليها النبي محمد بنفسه، وجلس على قبرها وعيناه تذرفان

இந்த மூன்று சகோதரிகளின் வரலாறும் ஹதீஸ்களிலும் வரலாற்றிலும் மிக உறுதி பட பெருமானாரின் பிள்ளை கள் என்று இருக்கிறது. ஆனால் ஷியாக்கள் இம்மூவரையும் பெருமானாரின் வளர்ப்பு பிள்ளைகள் என்று கூறுகிறார்கள்.

பாத்திமா ரலி அவர்களின் மீது போலித்தனமாக அவர்கள் காட்டும் ஈடுபாடு பெருமானாரின் வரலாற்றிலேயே அவர்களை எந்த அளவு அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

5.   பாத்திமா பெருமானாரின் 35 வது வயதில் பிறந்தார்.  

பெருமானாரை அவர்ர ஜுஹ்ரா என்று அழைத்தார்கள்.

الزهراء-أنها كانت بيضاء اللون مشربة بحمرة زهرية-

பாத்திமா ரலி அவரக்ளின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு. அது ஒரு தனி தலைப்பில் பேசப்பட வேண்டியவை.

அவர் பெருமானாரின் இதயத்திற்கு மிக நெருக்கமானவராக இருந்தார்

நடை உடை பாவனைகளில் பெருமானாரை போலவே இருப்பார்.

அவரது 20 வயதில் அவரை அலி ரலி அவர்களுக்கு பெருமானார் (ஸல்) திருமணம் செய்து வைத்தார்கள். 480 திருஹம் மஹராக கொடுக்கப் பட்டது.

அலி ரலி அவர்களுக்கு பாத்திமா அம்மா ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொடுத்தார்கள்./

أنجب منها الحسن والحسين في السنتين الثالثة والرابعة من الهجرة على التوالي

 أنجب زينب وأم كلثوم والمحسن

பெருமானார் (ஸல்) அவர்கள் பாத்திமா ரலி அவர்கள்ள பாராட்டி ஏரளமாக சொல்லி இருக்கிறார்கள்

سيّدَةُ نِساءِ أَهْلِ الجَنَّةِ فَاطِمَة

المَهْدِيِ مِنْ عِتْرَتي مِنْ وُلدِ فَاطِمَة

பெருமானார் (ஸல்) அவரக்ளின் மரணத்திற்கு ஆறு மாதத்திற்கு பிறகு பாத்திமா ரலி  ஹிஜ்ரீ 11 ரமலானில் வபாத்தானார்கள்.

பாத்திமா ரலி அவர்களின் மிகப் பெரும் சிறப்பு அவரக்ளின் வழியாகத்தான் பெருமானாரின் சந்ததிகள் நிலைப் பெற்றார்கள்.

6.    عبد الله بن محمد،

இவருக்கு தாஹிர் தய்யிப் என்ற இரு பட்டப் பெயர்கள் உண்டு.

நபித்துவத்திற்கு பிறகு பிறந்த இவர் சில காலத்திலேயா மரணமுற்று விட்டார்கள்.

وُلد في مكة بعد بعثة النبي محمد

توفي صغيراً في مكة،

7.   إبراهيم 

பெருமானாரின் 60 வயதில் பிறந்த குழந்தை இபுறாஹீம் ரலி>

மாரியத்துல் கிப்திய்யா ரலி என்ற அடிமை பெண்ணுக்கு க்கு பிறந்தார்.

அடிமைகளோடு உறவு கொள்வது அங்கீகரிக்கப் பட்ட ஒன்றாக இருந்தது.

தனது வாழ்நாளில் எந்த ஒரு அடிமையையும் வைத்துக் கொள்ளாத பெருமானார் (ஸல்) அவர்க்ள் எகிப்து நாட்டின் அரசர் அனுப்பியது அதை நீங்கள் தவிர்க்க கூடாது என்று கேட்டுக் கொண்டதற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் மாரியத்துல் கிப்திய்யா அம்மாவை தனது அடிமைப் பெண்ணாக வைத்துக் கொண்டார்கள். அவர் மூலம் இபுறாஹீம் ரலி என்ற மகனை பெற்றெடுத்தார்கள். அடிமை பெண்ணுக்கு குழந்த்த பிறந்தால் அந்த குழந்தையையும் அடிமையாக வைத்துக் கொள்வதும் அதை விலை பேசி விற்று விடுவதும் அன்றைய வழக்கமாக இருந்தது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மாரியா அம்மாவை திருமணம் செய்து அவர் மூலம் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு அடிமைப் பெண்கள் விவகாரத்தில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார்கள்.   

இபுறாஹீம் ரலி அதிக நாள் வாழவில்ல்ல. 18 மாதத்தில் மரணமடைந்து விட்டார்.

وُلد في المدينة المنورة سنة 8هـ 

وتُوفي فيها سنة 10هـ عن عمر 18 شهرً

فتحدّث الناس أن الشمس كُسفت لموت إبراهيم، فقال النبي محمد: «إنَّ الشمسَ والقمرَ من آيات اللهِ، وإنهما لا يَنخسفان لموتِ أحدٍ ولا لحياتِه، فإذا رأيتُموهما فكبِّروا، وادعو اللهَ وصلُّوا وتصدَّقوا

பேரக் குழந்தைக்ள் 8

ஜைனப் ரலி அவர்கள் மூலம் இருவர். அலீ – உமாமா ரலி – இதில் அலீ சிறுவயதில் இறந்து விட்டார்.

ருகைய்யா ரலி மூலம் ஒரு பேரர் . அப்துல்லாஹ். அவர் 6 வயதில் இறந்து விட்டார்.

பாத்திமா ரலி அவர்கள் மூலம் ஐந்து பேரக் குழந்தைகள் இதில் முஹ்ஸின் சிறு வயதில் இறந்து விட்டார்.

ஆக 8 பேரக் குழந்த்தகளில் 3 பேரக் குழந்தைகள் சிறுவயதில் இறந்து விட்டனர்.

خمسة منهم لابنته فاطمة وهم: الحسن، والحسين، ومحُسن، وأمُّ كُلثُوم، وزينب، وقد توفّي مُحسن في صِغره.

 واثنان من أحفاده لابنته زينب وزوجها أبي العاص رضي الله عنهما وهما: عليّ، وأُمَامَة، وقد توفّي عليّ في صِغره.

وحفيد واحد لابنته رُقيَّة وزوجها عُثمَان بن عفَّان رضي الله عنهما واسمه عبد الله وقد توفّي عبد الله لمَّا بلغ السَّادِسة مِن عُمُره.

பெருமானாருக்கு ஒரு வளர்ப்பு மகன் உண்டு. அவருடைய பெயர் ஜைது பின் ஹாரிதார் (ரலி)

 زيد بن حارثة

والوحيد من بين أصحاب النبي محمد صلى الله عليه وسلم الذي ذُكر اسمه في القرآن

حِبّ رسول الله

فاشتراه حكيم بن حزام

ما أنا بالذي أختار عليك أحدًا. أنت مني بمكان الأب والأم»، فتعجّب أبوه وعمه وقالا: «ويحك يا زيد أتختار العبودية على الحرية وعلى أبيك وعمك وأهل بيتك؟!»، قال: «نعم. إني قد رأيت من هذا الرجل شيئًا ما أنا بالذي أختار عليه أحدًا أبدً

خرج به إلى الحِجْر، وقال: «يا من حضر اشهدوا أن زيدًا ابني أرثه ويرثني». فلما رأى ذلك أبوه وعمه اطمأنا وانصرفا. فصار زيد يُدعي «زيد بن محمد»

 இவருடைய மகன் உஸாமா  பின் ஜைது பெருமானாரின் பேரன்பிற்குரியவராக இருந்தார்.  

وحين فرض الخليفة الثاني عمر بن الخطاب لأسامة بن زيد عطاءً من بيت مال المسلمين أكثر مما فرض لابنه عبد الله بن عمر، كلمه عبد الله في ذلك، فقال: «إنه كان أحب إلى رسول الله  منك، وإن أباه كان أحب إلى رسول الله  من أبيك

நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்பு மகனுக்கும் சொந்த பிள்ளைகளுக்கும் வித்தியாசம் பாராட்டியதில்ல்ல.

பெருமானாருடைய வாழ்க்கைகு மேலும் பொலிவு ஊட்டுகிற செய்தி இது.

நமது தலைவர் முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் மனித வாழ்வின் அனைத்து அம்சத்திலும் புகழுக்குரியவராக திகழ்கிறார்.

அதில் அவர்களுடைய பிள்ளைகளின் பங்கும் முக்கியமானது.

எல்லாம் வல்ல அல்லாஹ் பெருமானாரை நேசிப்பதோடு அவர்களது பிள்லைகளையும் பேரப்பிள்ளைகளையும் அவர்களது வழித்தோன்றல்களையும் நேசித்து நம்மை வாழச் செய்வானாக!